‘தளபதி 68’ திரைப்படத்தில் இவர்களா? – வெளியான புதிய தகவல்..!

வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’ படத்தில் ஜெயராம், மோகன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி…

வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’ படத்தில் ஜெயராம், மோகன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று ‘தளபதி 68’ படத்திற்கான பூஜை நடைபெற்று முடிந்தது. ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் தளபதி 68 படத்திற்கான அப்டேட்கள் கொடுக்கப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபுவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தில் ஜெயராம், மோகன், சினேகா, லைலா உள்ளிட்டோர் இணைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும், மோகனின் கதாபாத்திரம் பல வித்தியாசமான சாயல்களைக் கொண்டிருப்பதாகவும், விஜய்யுடன் பல்வேறு காட்சிகள் உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.