முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும், டி20 தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில்ம் இந்தபோட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால், அவர் இறுதி டெஸ்டில் பங்கேற்காமல் இருந்தார். தொடர்ந்து அவர் டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறபட்ட நிலையில், அவர் டி20 தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்நிலையில், ஆர்ச்சரின் காயம் தீவிரமடைந்துள்ளதால் அவரை சிகிச்சைக்காக நாட்டுக்கு திருப்பி அணு இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவிக்கையில், “ ஆர்ச்சருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும், அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதும் சந்தேகமே” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருமணமாகாத விரக்தி; உயிரை மாய்த்து கொண்ட காவலர்

G SaravanaKumar

தீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

Gayathri Venkatesan

தொழிற்படிப்புகளில் உள் ஒதுக்கீடு; விரைவில் அறிக்கை

G SaravanaKumar