தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்

தன் வாழ்நாள் முழுவதும் தொல்லியல் துறைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த நாகசாமி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார். தொல்லியல் ஆய்வாளரான நாகசாமி 1930ம் ஆண்டு கொடுமுடியில்…

தன் வாழ்நாள் முழுவதும் தொல்லியல் துறைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த நாகசாமி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார்.

தொல்லியல் ஆய்வாளரான நாகசாமி 1930ம் ஆண்டு கொடுமுடியில் உள்ள ஊஞ்சலூரில் பிறந்தார். 1959ம் ஆண்டு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாளராக தன் பணியைத் தொடங்கினார். 1963ம் ஆண்டு வரை அந்தப் பணியிலேயே தொடர்ந்தார். 1963 முதல் 1966 வரை தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி இயக்குநராகப் பணி செய்தார்.

பின்னர் 1966 முதல் 1988ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் முதல் தொல்லியல் துறை இயக்குநராக பணியாற்றினார். தொல்லியல் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நாகசாமி சென்னை பல்கலைக்கழகத்தில் “சமஸ்கிருதத்தில்” முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் பூணா பல்கலைக்கழகத்தில் “தொல்லியல் துறையில்” முனைவர் பட்டம் பெற்றார்.

மேலும், இவர் புகளூரை சேர்ந்த சேரர்களின் கல்வெட்டை ஆவணப்படுத்தியிருக்கிறார். மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் கண்கவரும் ஒளி, ஒலி அமைப்புக்கு அவர்தான் காரணம். கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனை போன்றவை இவர் காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டவையே. இவர் 12 அருங்காட்சியகங்களின் உருவாக்கத்தில் பணியாற்றியிருக்கியிருக்கிறார். தொல்லியல் துறை சம்பந்தமாக 120 புத்தகங்களை எழுதி தொல்லியல் துறை சார்ந்த தகவல்களைச் செறிவாகப் பதிவு செய்துள்ளார்.

கோயில்கள், மதம், சமஸ்கிருதம், சிலைகள், போன்றவற்றைப் பற்றி அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் கடத்தப்பட்ட தமிழகத்தின் பல சிலைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறைக்கு இவர் செய்த அரும்பணியை பெருமைப்படுத்தும் விதமாக 2018ம் ஆண்டு பத்மவிபூஷன் விருது கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.