‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ‘நரச்ச முடி’ பாடலை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த திரைப்படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகியும் சில பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் உள்ளது.
இந்நிலையில், கடந்த வருட இறுதியில் திரைப்படம் வெளிவரும் என இயக்குநர் கெளதம் மேனன் அறிவித்தார். அதன்படி தற்போது இந்தத் திரைப்படம் இந்த வருடம் நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







