‘வாழை’ படக்குழுவுக்கு இசையமைப்பாளர் #ARRahman வாழ்த்து!

இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படக்குழுவினருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம்…

இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படக்குழுவினருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்று (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் பாலா, நடிகர் சூரியும் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். இந்நிலையில் தற்போது படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.  அதன்படி, இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படக்குழுவினருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.