29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் செங்காடு ஊராட்சி மன்ற செயலர் மகேந்திரன் தேசிய ஊராட்சிகள் தின உறுதிமொழியை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, அமைச்சர் அன்பரசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கிராம மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, பள்ளி மேலாண் குழு அமைத்தது பற்றி தெரியுமா என கிராம மக்களிடம் அவர் கேள்வி கேட்டார். அதற்கு தெரியும் என பதிலளித்த பெண்ணுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து செங்காடு நியாயவிலை கடைகளில் அரிசி மற்றும் பொருட்கள் தரமாக இல்லை என ஒரு பெண் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிக்குமாறு நியாய விலை கடை ஊழியர்கள் தெரிவிப்பதாக வருத்தம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், தரமற்ற பொருட்களை வழங்கும் நியாயவிலை கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அண்மைச் செய்தி: “கோயம்பேடு சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை” – தொழிலாளர்கள் புகார்

இதனை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊராட்சியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கட்டமைப்பை உயர்த்த வேண்டும் என்பதே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பம் என தெரிவித்தார். வருடந்தோறும் 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவித்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர், உள்ளாட்சி பிரிதிநிதிகளுக்கு 10 முதல் 15 விழுக்காடு அமர்வு படி உயர்த்தப்படும் என கூறினார்.

மேலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி என்று பாராமல் அனைத்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், புதிய அறிவிப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading