சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் & தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படங்களை உருவாக்குவது சார்ந்த பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டு கால Bachelor of Visual Arts படிப்பில் Cinematography, Digital Intermediate, Audiography, Direction and ScreenPlay Writing, Film Editing, Animation and Visual Effects ஆகிய பிரிவுகளில் சேர இன்று முதல் வரும் ஜூலை 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
http://www.tn.gov.in அல்லது http://www.dipr.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விரிவான தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 27 இறுதி நாள் ஆகும்.
இதனிடையே, உடற்கல்வி, விளையாட்டு, யோகா படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உடற்கல்வியியல் & விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
DEE படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
இதேபோல், தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் ( DEE ) சேர https://scert.tnschools.gov.in இணையதளத்தில் ஜூலை 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ITI சேர விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் வரும் ஜூலை 20 வரை http://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள், சந்தேகங்களுக்கு 9499055612 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
B.P.Ed., M.P.Ed., உள்ளிட்ட 17 வகையான படிப்புகளில் சேர http://www.tnpesu.edu.in என்ற இணையதளத்தில் வரும் 26-ம் தேதி முதல் ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-மணிகண்டன்