ஆப்பிள் நிறுவனாமனது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது . இந்தியாவில் சென்னை உட்பட சில நகரங்களில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இன்று மார்க்கெட்டில் தனி டிமாண்ட் உள்ளது.
மொபைல் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆப்பிள் , லேப்டாப் சந்தையிலும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அந்த வகையில், வரும் மார்ச் மாதம் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப் சாதனம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏ18 புரோ சிப்செட், 12.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் விலையானது அமெரிக்க சந்தையில் 500 டாலர்களாகவும் இந்தியாவில் அதன் மதிப்பு ரூ.46,000 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கபபடுகிறது.
மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ள இந்த அறிமுக விழாவில் ஐபோன் 17e ஸ்மார்ட்போன், மேம்படுத்தப்பட்ட மேக்புக் புரோ, புதிய ஐபாட் ஏர் மற்றும் ஐபாட் (12-வது ஜெனரேஷன்) சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







