“ஐ பேட்” விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்

2019ம் ஆண்டு வெளியான “ஐ பேட்-7” வரையிலான விற்பனையை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த காலத்தில் ஒரு சாதனம் மற்றொரு சாதனத்தை மட்டுபடுத்தி மேலெழுவது இயல்பு.…

2019ம் ஆண்டு வெளியான “ஐ பேட்-7” வரையிலான விற்பனையை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த காலத்தில் ஒரு சாதனம் மற்றொரு சாதனத்தை மட்டுபடுத்தி மேலெழுவது இயல்பு. இசைக்கென்று கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த இசைப்பிரியர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்துள்ளது.

அந்த வகையில் வாக்மேன் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வாக்மேன் 35 ஆண்டுகளுக்கு முன்பு 1979 இல் உருவாக்கப்பட்டது. இசையை செல்லும் இடமெல்லாம் காதோடு கேட்டு ரசிக்க கண்டுபிடிக்கப்பட்டதே வாக்மேன். காதில் ஹெட்போனை போட்டுக்கொண்டு கேசட்டை வாக்மேனில் போட்டு, செல்லுமிடமெல்லாம் பாட்டு கேட்டுக்கொண்டே செல்லலாம்.

சர்வதேச சந்தையில் வாக்மேன் நுழைந்த நேரத்தில், Soundabout, Stowaway மற்றும் Walkman என்ற பெயர்கள் தோன்றின. இது இறுதியில் வாக்மேன் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

வாக்மேனின் வளர்ச்சி இவ்வாறு இருக்க.. 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி ஆப்பிள் நிறுவனமானது ஐபாட் டச்-யை அறிமுகப்படுத்தியது. எம்பி3 வடிவத்தில் ஆயிரம் பாடல்களை சேமிக்கும் திறன் கொண்ட ஐபாட்-டச், தரமான இசையை கேட்கும் வகையிலும், பாக்கெட் வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொலைபேசி அழைப்புகளை தவிர, ஐ-மேசஜ் போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றிருந்தன.

மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸால் 21 ஆண்டுகளுக்கு முன் பாடல்களைக் கேட்பதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட சாதனம் தான் வாக்மேன்.

இந்த நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு ஐபாட் டச்சினை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஐபாட் டச் மட்டுமே விற்கப்படும் என்றும் புதிதாக உற்பத்தி செய்யப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக விளங்கிய ஐ-பாட் இன்றளவும் விற்பனையாகும் சாதனமாக விளங்கினாலும் 2001 ஆம் ஆண்டு அறிமுகமான ஐ-பாடிலிருந்து இறுதியாக 2019-ல் வெளியான ஐ-பாட் 7 வரையிலான அனைத்து சாதனங்களின் உற்பத்தியையும் ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவுள்ளது.

 

பரசுராமன்.ப- மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.