முக்கியச் செய்திகள் வணிகம்

8 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்

அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல், கடந்த மார்ச்சில் 7.68 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஏப்ரலில் 8.38 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கம் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையைப் பொறுத்து அந்த உயர்வின் கால அளவு மாறுபடும் என நிதி அமைச்சகம் அதன் மாதாந்திர ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பணவீக்கத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அது உறுதி அளித்துள்ளது.

பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவு உயர்வதால், வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மூலமே நாட்டின் 80 சதவீத எரிபொருட்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 139 டாலராக உயர்ந்துள்ளது. இதனால், எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரஷ்யாவிடம் இருந்து சகாய விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், இந்த விலை உயர்வு கட்டுக்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

ஒமிக்ரான் பரவல்; கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன்

Arivazhagan CM

ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை

Vandhana

பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

Saravana Kumar