பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி என்றும் கூறும் அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் எங்களை எதிர்க்க தைரியம் உள்ளதா என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கட்சியின் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்ணியமாகக் காங்கிரஸ் கட்சியை அழைத்து காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்ததாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இதுவரை அதிமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் தாமாகவுக்கு தான்
கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நிமிடம் வரை இந்த தொகுதியில் அதிமுக
பாரதிய ஜனதா கூட்டணியில் யார் போட்டியிடுவது என்று அறிவிக்கவில்லை.
அதிமுக நான்கு பிரிவுகளாக தாங்கள் தான் நிற்போம் என்று சொல்கிறார்கள்.
தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி என்றும்
கூறும் அண்ணாமலை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தங்களை எதிர்த்து அண்ணாமலை நிற்கத் தயாரா என்றும் தைரியம் இருந்தால் நிற்கட்டும் என்று சவால் விடுவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
எங்கள் கூட்டணியிலே பெரிய கட்சி அதிமுக தான் என்று அண்ணாமலை தற்பொழுது கூறி
வருகிறார். அதனால், தான் பாரதிய ஜனதா ஒரு காகிதப்புலி என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இதுவரை எதிரிகளே இல்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளர்
இளங்கோவன் மகத்தான வெற்றி
பெறுவார் என்றும் கே. எஸ். அழகிரி கூறினார்.