நடிகை அனுஷ்கா ஷெட்டி, துபாய் தொழிலதிபர் ஒருவரை மணக்க இருப்பதாக, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழில், சிங்கம், வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், தாண்டவம், என்னை அறிந்தால், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனுஷ்கா. இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸும் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.
இதை இரண்டு பேருமே மறுத்தனர். தாங்கள் நண்பர்கள்தான் என்றும் காதலிக்க வில்லை என்றும் கூறியிருந்தனர். பின்னர் நடிகை அனுஷ்கா, உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. அதை நடிகை அனுஷ்கா மறுத்திருந்தார். பின்னர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்திருந்தார்.
தனது திருமணம் நிச்சயிக்கப்பட்டால் அதை மறைக்கமாட்டேன் என்றும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் துபாய் தொழிலதிபர் ஒருவருடன் அவருக்குத் திருமணம் பேசப் பட்டுள்ளதாகவும் அவர் நடிகை அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது உண்மையா, வதந்தியா என்பது நடிகை அனுஷ்கா ஷெட்டி சொன்னால்தான் தெரியவரும்.







