மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா..

நடிகை அனுஷ்கா சர்மா முதன்முதலாக தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் 4 ஆண்டுகளாக காதலித்து…

நடிகை அனுஷ்கா சர்மா முதன்முதலாக தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதன்பின் அவர்களது திருமணம் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, கடந்த மாதம் 11ம் தேதி அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு அவரது ரசிகர்களும், பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அனுஷ்கா சர்மா முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் இவருவரும் அன்பு, மற்றும் நன்றியுணர்வோடு ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்தோம். தற்போது எங்களது குழந்தை வாமிகா அதை ஒரு புதிய மாற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார். கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம் – சில நிமிடங்களில் சில நேரங்களில் அனுபவித்த உணர்வுகள்! தூக்கம் இது எல்லாம் இருந்தாலும் தற்போது எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளது. உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, விராட்கோலி, எனது முழு உலகமும் ஒரே சட்டகத்தில் அடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply