மலேசியாவில் ஊழல் தடுப்பு ஆணையம் 34 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.100 கோடி ரொக்கம், 200 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் அந்த நாட்டு ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக கிளாங் பள்ளத்தாக்கு பகுதியில் மொத்தம் 34 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத 38 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், 200 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்ட்டது. மேலும் 17 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொர்பாக டத்தோ தொழிலதிபர் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார். அவர்கள் மீது பணமோசடி, வருமான வரி சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.







