முக்கியச் செய்திகள்சினிமா

கலகலப்புக்கு பஞ்சமில்லாத லேட்டஸ்ட் அப்டேட்; “சந்திரமுகி 2” படத்தின் டப்பிங்கை முடித்த வடிவேலு…

பி.வாசு இயக்கத்தில்  நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் , ”சந்திரமுகி 2”  திரைப்படத்தின் டப்பிங் பணிகளை வடிவேலு நிறைவு செய்துள்ளார்.   

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறு ஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் ராதிகா, வடிவேலு, லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவி மரியா என நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தின் தொடர்பு இல்லாமல் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான “நாகவள்ளி” திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி, ”சந்திரமுகி 2” படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இசை விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதோடு, இந்த சந்திரமுகி- 2 படத்தின் முதல்பாடல் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அண்மையில் ராகவா லாரன்ஸ் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்திருந்த நிலையில் தற்போது வடிவேலு அவருடைய டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு நகைச்சுவை காட்சிகளில் ஏற்பட்ட சுவாரஸ்ய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளது. மிகவும் கலகலப்பாக இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகி வருகிரது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

RT – PCR பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Arivazhagan Chinnasamy

செப்.1 முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

Gayathri Venkatesan

சென்னையில் 2024 ஜனவரியில் சர்வதேச புத்தக கண்காட்சி – மொழிபெயர்ப்புக்கு ரூ.3கோடி நிதி

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading