#Cuddalore : காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை – கணக்கில் வராத ரூ.2.17 லட்சம் பறிமுதல்!

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 17 ஆயிரம் லஞ்சப் பணத்தை கைப்பற்றினர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள…

#Cuddalore : Anti-bribery raid at Kadampuliyur registrar's office - unaccounted Rs 2.17 lakh seized!

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 17 ஆயிரம் லஞ்சப் பணத்தை கைப்பற்றினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் மேற்பார்வையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் சுஜாதா தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூபாய் 2
லட்சத்து 17 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத பணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.