முக்கியச் செய்திகள்

நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுனர்களுடன்
ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம். நீட் விலக்கில் முன்னேற்றம் வரும் என எதிர்பார்ப்போம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2ஆம் ஆண்டையொட்டி சென்னை
சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்புப் பகுதியில்
பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.
அவருடன் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவம் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் துவங்கியது. அந்த திட்டம் 2 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 1 ஆண்டில் தமிழகத்தில், 74.92% பேருக்கு பரிசோதனையும், 83,23,723 பேருக்கு மருந்துப் பெட்டகமும் வழங்கப்பட்டு உள்ளது. 1,56,57,595 மருந்துப் பெட்டிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், 83,73,724 மருந்துகள் விநியோகம் ஆகியுள்ளது. அது மட்டுமின்றி மருந்து காலியாகிவிட்ட நபருக்கு ரிபீட்டட் சேவை முறையில் வழக்கப்பட்டு உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நோயாளிகளின் உடம்பில் உள்ள குறைபாடுகள் பற்றி அறிந்துகொள்ள சுகாதார குடும்ப
புத்தகம் வழங்கப்பட்டது. தற்பொழுது தமிழகம் முழுவதும் மருத்துவ குடும்ப அட்டை
வழங்க இருக்கிறோம். இந்த திட்டத்தைப் பொருத்தவரை சென்னையில் காலதாமதாம்
ஆகினாலும் 15,75,400 பேர் பரிசோதனைக்குட்படுத்த உள்ளனர். இந்த திட்டத்தின்
பயன் முக்கியமாக மலைவாழ் மக்களுக்கு முதலில் கொண்டு செல்லும் நோக்கில் இத்திட்டம் சென்னையில் தாமதமாகியுள்ளது. முக்கியமாக கிராமப்புற மக்கள் மருத்துவம் பார்க்க இத்திட்டம் மூலம் 10 ஆயிரம் செவிலியர்கள் மேல் உள்ளனர். 19,535 பேர் இந்த திட்டத்திற்கு முழுவதுமாக செயல்பட்டு வருகிறோம். இன்னும் 2 ஆயிரம் பேரை இத்திட்டதிற்கக்காக NHM நியமிக்க உள்ளது.

மேலும், நீட் தேர்வை பற்றி பேசிய அமைச்சர் நீட் விலக்கில் தமிழகம் தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம். நீட்
விலக்கில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம். சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் செவிலியர்கள் குறைபாடு இருந்து வருவது உண்மைதான். தற்போது இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் சென்று கொண்டிருக்கின்றன. செப்டம்பர் மாதத்திற்குள் தமிழக முழுவதும் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களில் செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆர்யன் கானுக்கு கிடைக்குமா ஜாமீன்? இன்றும் தொடர்கிறது விசாரணை

Halley Karthik

ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – உத்தரவு

EZHILARASAN D

‘பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது’ – ஓபிஎஸ்

Arivazhagan Chinnasamy