2025-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியால் ஆண்டு தோறும் ’நோபல் பரிசு’ வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அறிவியல் சமூகத்தால் இது உலகின் மிகவும் உயிரிய விருதாக கருதப்படுகிறது. மேலும் இது இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி , பொருளாதாரம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் லாஸ்லோவின் கவர்ச்சியான, தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.