முக்கியச் செய்திகள் சினிமா

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மோஷன் போஸ்டர் மற்றும் இரு பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதற்கு முன்னர் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால், இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆயுத பூஜை கொண்டாடப்படும் வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு, அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீஸர் வெளியீடு குறித்த அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

Halley karthi

கடந்த 2 மாதத்தில் இல்லாத அளவில் குறைந்தது கொரோனா பாதிப்பு!

Halley karthi

நேரம் இருப்பதை பொறுத்து அனைத்து கட்சியினரும் பேச வாய்ப்பு: சபாநாயகர் அப்பாவு உறுதி

Halley karthi