உள்ளூர் விமான சேவைக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதையடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிலும், மார்ச் 24ம் தேதி அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு 21 நாட்கள் நீட்டித்தது.
அதன்பின்னர் மே மாதம் 21ம் தேதி கட்டுப்பாடுகளும் உள்ளூர் விமான சேவை துவங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜூலை 17ம் தேதி சர்வதேச விமான சேவையும் தொடங்கப்பட்டது.இந்நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி வரும் 18ஆம் தேதி முதல் 100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை கொரோனா கட்டுப்பாடுகளால் 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








