முக்கியச் செய்திகள் தமிழகம்

‘நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்’

தமிழ்நாடு நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலை அருகிலிருந்து தொடங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்ட திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், இந்த பாத யாத்திரை சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் தற்போது பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படுகிறது. மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க வினர் செருப்பு வீசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது காட்டுமிராண்டித்தனமான செயல். அமைச்சர் என்றில்லை தனி மனிதன் மீதும் இது போன்ற தாக்குதல் செய்யக் கூடாது. கருத்தைக் கருத்தால் தான் எதிர் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘சின்னதிரை நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக புதிய கட்டடம்; தீர்மானம் நிறைவேற்றம்!’

தொடர்ந்து பேசிய அவர், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும் எனக் கூறிய அவர், நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆனால், ஆளுநருக்கென்று சில வரைமுறைகள் உள்ளது. அதை அவர் பின்பற்ற வேண்டும். ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, ஆளுநர் அரசியல் பேசக் கூடாது எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாணவி தற்கொலை; சிபிஎம் மாநிலச் செயலாளர் முதலமைச்சருக்குக் கடிதம்!

Arivazhagan Chinnasamy

5-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜிஎஸ்டி: 54-ஆயிரம் பேருக்கு பாராட்டு சான்றிதழ்

3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

Web Editor