ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் மாணவர்களுக்கு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு மணிநேரம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில், மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்,…

பொறியியல் மாணவர்களுக்கு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு மணிநேரம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில், மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேர்வில் பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேர்வில் பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. லேப்டாப், ஸ்மார்ட் போன் மற்றும் கணினி உள்ளிட்டவற்றில், தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஆன்லைன் தேர்வு எழுதும் போது, மாணவர்கள் தங்கள் அருகில் வேறு யாரையும் அமர வைக்கக் கூடாது என தெரிவித்துள்ளது. Viva தேர்வும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply