பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன், அனில் அந்தோணி..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோனி இன்று பாஜகவில் இணைந்தார். பிபிசி சேனல், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோனி இன்று பாஜகவில் இணைந்தார்.

பிபிசி சேனல், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தில் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. மேலும் உண்மைக்கு மாறாக இந்த ஆவணப்படம் இருப்பதாக கூறி இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்த தடை உத்தரவை மீறி அந்த ஆவணப்படத்தை திரையிட்டும், திரையிட முயற்சித்தும் பல மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டனர். பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டங்கள் தெரிவித்ததோடு, பிபிசியின் மோடி குறித்த ஆவணப்படத்தை மொழிபெயர்த்து வெளியிடுவோம் எனவும் கூறியிருந்தனர்.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி செய்தி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட ஆவணப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, இது இந்தியாவுக்கு எதிரான செயல் எனவும் கூறி, காங்கிரஸ் கட்சியி கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலை இன்று நேரில் சந்தித்த அனில் அந்தோணி, அவர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அப்போது கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி. முரளிதரன், கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனில் அந்தோணி, “ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு வேலை செய்வது மட்டுமே தங்களின் தர்மம் என்று காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் நம்புகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்வதாகவே நான் நம்பினேன். ஆனால் அது பொய் என்று பிறகுதான் தெரிந்தது. இந்தியாவை தொலைநோக்குப்பார்வையுடன் கொண்டு செல்வதற்கான அணைத்து முயற்சிகளையும் பிரமதர் மோடி செய்து வருகிறார். சமூகம் குறித்த தெளிவான பார்வை அவரிடம் உள்ளது. அவரால் ஈர்க்கப்பட்டே பாஜகவில் இணைந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவருமான ஏ.கே.அந்தோணியின் மகன்தான் இந்த அனில் அந்தோணி எனபது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/BJP4India/status/1643913196447895552?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.