பாஜக துணைத் தலைவர்களாக ஏ.கே.அந்தோணியின் மகன் உள்பட 3 பேர் நியமனம்!

பாஜக துணைத் தலைவர்களாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர்…

பாஜக துணைத் தலைவர்களாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய் மற்றும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ராதா மோகன் அகர்வால் ஆகிய இருவரும் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்னர். மொத்தம் 13 துணைத் தலைவர்கள், 9 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவை சேர்ந்த சி.டி.ரவி, அசாம் எம்.பி. திலீப் சைகியா, மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் கோஷ் போன்ற பல தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் மகன் ஆண்டனி,  ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை காங்கிரஸ் கட்சி ஆதரித்ததை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் அக் கட்சியில் இருந்து வெளியேறியவர் அனில் ஆண்டனி.

இதே போல், உத்தரப்பிரதேச சட்ட மேலவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் இருந்து விலகியவர் தாரிக் மன்சூர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.