ஆந்திராவில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான பாலம் ஒன்று, லாரியின் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சாபுரம் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1929ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான ராமசந்திரா மகாராஜ் பாலம் இருந்தது. இப்பாலம் முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பாலத்தின் மீது கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தப்போது
திடீரென பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது.
இதனால் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த இரண்டு லாரிகள்,ஒரு கார் ஆகியவை
அப்படியே பாலத்தின் கீழிருந்த கால்வாயில் விழுந்தன. நல்ல வேளையாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாலத்தில் அச்சமயத்தில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இவ்விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
—–வேந்தன்







