மூக்கு அறுவை சிகிச்சை குறித்து மீண்டும் மனம் திறந்த பிரியங்கா சோப்ரா!

மூக்கு அறுவை சிகிச்சையால் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.  சமீபத்திய ஹோவர்ட் ஸ்டெர்ன் நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அவருக்கு நடந்த…

மூக்கு அறுவை சிகிச்சையால் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். 

சமீபத்திய ஹோவர்ட் ஸ்டெர்ன் நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அவருக்கு நடந்த மூக்கு அறுவை சிகிச்சை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த சம்பவம் தனது இருண்ட காலம் என்று பதில் அளித்தார். மூக்கில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை தன்னை ஆழ்ந்த மனச்சோர்வுக்கு தள்ளியது என்றும், அது தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்றும் நினைவு கூர்ந்தார்.

நடிகை பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் பட்டத்தை வென்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே, அவர் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் திசு வளர்ச்சி  இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாகவும், அவரது நாசி குழியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்ததாகவும் அவர் கூறினார். மருத்துவர் தற்செயலாக  அறுவை சிகிச்சையின் போது தனது மூக்கின் தோற்றத்தை மாற்றியதால், தான் மூன்று படங்களின் வாய்ப்புகளை இழந்ததாக கூறினார். தனது நடிப்பு வாழ்க்கை ‘தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிட்டதாக’ அவர்  அஞ்சியதாக தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தில் மருத்துவராக இருந்த தனது மறைந்த தந்தை அசோக் சோப்ரா தனது அச்சங்களை மீறி அறுவை சிகிச்சை செய்ய ஊக்குவித்தார் என்பதையும், தன் தந்தை தன்னுடன் சிகிச்சை அறையில் இருப்பது போல் உணர்ந்ததாகவும் நடிகை பிரியங்கா கூறினார்.

அறுவை சிகிச்சை குறித்து பிரியங்கா பேசுவது இது முதல் முறையல்ல. தனது தொழிலை மேம்படுத்துவதற்காக அதிக ஒப்பனை நடைமுறைகளைப் பெற ஊக்கப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.