செய்திகள்

பெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த காவல்துறை!

கல்லூரி பேராசிரியர் தம்பதி, தங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் புருஷோத்தன் – பத்மஜா தம்பதி. இதில், கணவர் கல்லூரி துணை முதல்வராகவும், மனைவி பேராசிரியராகவும் பணியாற்றி வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள் இருந்தனர். மூத்த மகள், அலேக்யா, மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்துள்ளார். இளையமகள், சாயி திவ்யா இசை கல்லூரியில் பயின்று வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததால், மகள்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே பெற்றோருடன் இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நிகழ்த்தப்போவதாக, புருஷோத்தமன் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், இரவு திடீரென புருசோத்தமன் வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரணை செய்தபோது, மகள்களை டம்பல்ஸ் மூலம் அடித்து கொலை செய்து பின்னர் அவர்களை நிர்வாணமாக்கி நரபலி பூஜைக்கு உட்படுத்தியுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, தம்பதி இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என்றும் பூஜையின் மூலம் தங்களது மகள்கள் மீண்டும் உயிருடன் வருவார்கள் என்றும் தெரிவித்து அதிரவைத்துள்ளனர்.

மூட நம்பிக்கையால் பெற்ற மகள்கள் என்றும் பாராமால் பெற்றோரே நரபலி கொடுத்துள்ள சம்பவம் ஆந்திர மாநிலத்தை அதிரவைத்துள்ளது.

Advertisement:

Related posts

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும்:சத்யநாராயணா

Niruban Chakkaaravarthi

புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் விளக்கம்!

Karthick

திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும்: சி.டி. ரவி!

Saravana Kumar

Leave a Reply