தக்காளி விலை உயர்வால் ரூ. 30 லட்சம் சம்பாதித்த விவசாயி கொலை – போலீஸ் விசாரணை 

தக்காளி விலை உயர்வால் ரூ.30 லட்சம் சம்பாதித்தாக கூறப்படும் அந்திர மாநில விவசாயியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் போடிமல்லடின்னே கிராமத்தை  சேர்ந்தவர்  ராஜசேகர ரெட்டி…

தக்காளி விலை உயர்வால் ரூ.30 லட்சம் சம்பாதித்தாக கூறப்படும் அந்திர மாநில விவசாயியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் போடிமல்லடின்னே கிராமத்தை  சேர்ந்தவர்  ராஜசேகர ரெட்டி (62).  இவர் தனது தோட்டத்தில் தக்காளி சாகுபடி  செய்துள்ளார்.  தக்காளி திடீரென விலை உயர்ந்ததால் சுமார் 30 லட்ச ரூபாய் லாபம்  ஈட்டியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தான் தங்கியிருந்த விவசாய தோட்ட இல்லத்தில்  இருந்து பால் விற்பனைக்காக ஊருக்குள் சென்ற நிலையில் ,  கை, கால் கட்டப்பட்ட நிலையில், அவர் பிணமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது கணவர் ஊருக்குள் சென்ற நிலையில்  தக்காளி வேண்டும் என அவரை தேடி சிலர் வந்ததாகவும், கணவர் இல்லை என  தெரிவித்தவுடன் அவர்கள் சென்றுவிட்டதாக உயிரிழந்த ராஜசேகர ரெட்டி மனைவி  போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பணம் வைத்துள்ளதை தெரிந்து முதியவரை கொலை  செய்யும் நோக்கத்துடன் தோட்டத்திற்கு மர்ம கும்பல் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.