நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா ஆய்விற்கு சென்றபோது தனது காலணியை கழற்றி விட்டு அதனை ஊழியரை எடுக்க சொல்லும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் பிரபல நடிகையும் ஆவார். சுற்றுலா துறை அமைச்சர் என்ற முறையில் தன்னுடைய துறை தொடர்பான அபிவிருத்தி பணிகளை பார்வையிட நேற்று ரோஜா ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள சூரியலங்கா கடற்கரைக்கு சென்று இருந்தார்.
செருப்பு காலுடன் கடற்கரை மணலில் நடப்பது அவருக்கு சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கடற்கரையில் ஓரிடத்தில் தன்னுடைய சிறப்புகளை ரோஜா கழற்றி விட்டுள்ளார். அதன்பின் அந்த இரண்டு செருப்புகளும் உதவியாளர் ஒருவரின் கையில் இருந்தன.
இந்த நிலையில் செருப்புகளை கழற்றிவிட்ட ரோஜா அந்த செருப்புகளை தூக்கி வருமாறு அவரிடம் கூறியதாக கூறப்படுகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடிகையாக வளர்ந்து, எம்எல்ஏவாக உயர்ந்து தற்போது அமைச்சராக இருக்கும் அவர் இது போல் செய்யலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிக்கவும்: நடிகர் டிகாப்ரியோவுக்கு அழைப்பு விடுத்த அசாம் முதலமைச்சர்!!
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அமைச்சர் என்பதற்காக சக மனிதனை, காலணியை எடுத்துவருமாறு கூறுவது மிகவும் தவறு எனவும், இவ்வாறு நடந்ததை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மக்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.







