திடீரென தீப்பற்றி எரிந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து!

சென்னை நோக்கி வந்த  ஆந்திர மாநில அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டதால் பயணிகள்  எந்தவித சேதமின்றி உயிர் தப்பினா். சென்னை புழல் அருகே ஆந்திரா நெல்லூர் பகுதியில்…

சென்னை நோக்கி வந்த  ஆந்திர மாநில அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டதால் பயணிகள்  எந்தவித சேதமின்றி உயிர் தப்பினா்.

சென்னை புழல் அருகே ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருந்து ஆந்திரா அரசு பேருந்து
சென்னை மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது திடீரென பேருந்தில் புகை கிளம்பியதால் ஓட்டுநர் பேருந்து புழல்
அருகே கேம்ப் பகுதியில் நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் தீ
பேருந்து முழுவதும் பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்து இருந்து இறங்கி ஓடி உள்ளார். இதனை தொடர்ந்து பேருந்து முழுவதும் தீயானது பரவ துவங்கியதால் பேருந்தில் இருந்த 45 பயணிகள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சரியான நேரத்தில் ஓட்நர் சுதாரித்துக் கொண்டு பேருந்தை நிறுத்தியதால் எந்த காயமின்றி ஓட்டுநர் உட்பட பயணிகள் உயிர் தப்பினர்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்தும் தீயணைப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயன கலவைகளை அடித்தும் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா்  சம்பவ இடத்துக்கு வந்த புழல் போலீசார் பேருந்து தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.