முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவர்களை காப்பது அரசின் கடமை; அன்பில் மகேஸ்

பள்ளிக்கு வரும் மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடைமை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

 

தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். இதில், கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மழலையார் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்றல் குறைபாடு தொடர்பாக சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், மாணவர்களின் வருகையை பொறுத்து காலாண்டு அரையாண்டு தேர்வு நடத்துவது பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். தொடர்ந்து மாணவர்களே நம்பி பள்ளிக்கு வாருங்கள் உங்களை காக்க வேண்டியது அரசின் கடைமை என அவர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மரத்தில் தூக்கி வீசப்பட்ட ஊழியர் உடல்

Raj

கர்ணனுக்கு நடுக்கடலில் கட் அவுட்; அசத்திய புதுவை ரசிகர்கள்!

Halley karthi