அங்கன்வாடிகள் குழந்தைகள் தூங்கும் இடமல்ல- அமைச்சர் அன்பில் மகேஸ்

அங்கன்வாடிகள் குழந்தைகளை சாப்பாடு போட்டு தூங்கவைக்கும் இடம் மட்டுமே என  பெற்றோர்கள் கருதக்கக்கூடாது என்றும் அங்கு கல்வி போதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.  தஞ்சாவூர்…

அங்கன்வாடிகள் குழந்தைகளை சாப்பாடு போட்டு தூங்கவைக்கும் இடம் மட்டுமே என  பெற்றோர்கள் கருதக்கக்கூடாது என்றும் அங்கு கல்வி போதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மேலையூர் ஊராட்சியில் ரூ 9 லட்சம்
மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,
தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  அங்கன்வாடி மையங்கள் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்படுகிறது என்பதை விளக்கிய அன்பில் மகேஸ்,  அங்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கல்வியும் போதிக்கப்படுவதாகக் கூறினார்.

படங்கள் மூலம் எளிய முறையில் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் கல்வி போதிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ்,  அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு தூங்க வைக்கும் இடம் மட்டுமே என்கிற தவறான எண்ணத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும் என்றார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை கொண்டுவந்துவிடுவதை பெற்றோர்கள் கடமையாக கொள்ளவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.