முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் Health

ஆனந்த் அம்பானியின் உடல் எடை அதிகரிப்பும், போராட்ட வாழ்க்கையும்!

கடுமையான பயிற்சிகள் மூலம் தன் உடல் எடையை குறைத்து பலரையும் ஆச்சர்யப்பட வைத்த ஆனந்த் அம்பானி , தற்போது மீண்டும் உடல் எடை அதிகரிப்பால் கவனிக்கப்பட்டு பேசு பொருளாக மாறியிருக்கிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது காதலியும் தற்போது வருங்கால மனைவியுமான ராதிகா மெர்ச்சன்டுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா பற்றி தெரியாதவர்களுக்கு, அவர் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் என்பதுதான். ஆனந்த் மற்றும் ராதிகா விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று 2019 -லேயே அவர்களது குடும்பத்தினர் அறிவித்தனர். ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு நிச்சயதார்த்தம் குடும்பத்தின் மும்பை இல்லமான ஆன்டிலியாவில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி ஒரு பாரம்பரிய விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பெரிய பெரிய தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்வில் மணமக்களின் உடை அலங்காரங்கள் கவனிக்கப்பட்டதை தாண்டி, எல்லோராலும் கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட ஒரு நிகழ்வாக மாறியது என்னவோ ஆனந்த் அம்பானியின் உடல் எடை அதிகரிப்பு குறித்துதான்.தற்போது அவரது உடல் எடை அதிகரிப்பு பேசும் பொருளாக மாறியது எப்படி, உடல் குறைப்பு பயணத்தில் அவரது எண்ணம் சாதித்தியமானதா என்பது பற்றி பார்க்கலாம்.

2017- ஆம் ஆண்டு பிரபல நாளிதழ் ஒன்றிற்கு ஆனந்த் அம்பானியின் அம்மா அதாவது முகேஷ் அம்மாபணியின் மனைவி நீதா அம்பானி அளித்திருந்த நேர்காணலில், ஆனந்த் “அதிக ஆஸ்துமா நோயாளியாக இருந்ததால், நாங்கள் அவருக்கு நிறைய ஸ்டெராய்டுகளைப் போட வேண்டியிருந்தது”. அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட சிகிச்சை காரணமாகவே, ஆனந்த் அம்பானி உடல் பருமனால் அதிகரித்ததாகவும், அதிகப்படியான எடை என்று சொல்லகூடிய 208 கிலோ அளவு எடையுடன் இருந்தார் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அதே நேர்காணலில், நீதா அம்பானி நாங்கள் இன்னும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனந்த் அம்பானியை போன்ற உடல் பருமனை கொண்டு பல குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர்களது தாய்மார்கள் அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். உங்கள் பிள்ளையின் உடல் எடையை குறைக்க நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் குழந்தை எப்போதும் நம்மை பார்த்துதான் வளர்கிறது என்று கூறியிருந்தார்.

ஆனந்த் அம்பானியின் உடல் எடை குறைந்தது எப்படி?

ஆனந்த் அம்பானி தனது 21 வயதிற்குள்ளாகவே உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீவிர உடல் எடை குறைப்பு முயற்சியில் இறங்கினார். அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனந்த் தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் உடற்பயிற்சி செய்தார். அவரது தினசரி உடற்பயிற்சியில் 21 கிலோ மீட்டர் நடைபயிற்சி, யோகா, எடைப் பயிற்சி, செயல்பாட்டு பயிற்சி மற்றும் உயர் தீவிர கார்டியோ பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டு கிட்டத்தட்ட தனது இலக்கை அடைந்தார். அவரது கடுமையான முயற்சிகளுக்கு சிறப்பான பலன் கிடைத்தது.

உடல் எடையை குறைக்க ஆனந்த் அம்பானி என்னென்ன மாதிரியான உணவு முறைகளை பின்பற்றினார்?

ஆனந்த், சர்க்கரை இல்லாத, அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்புள்ள குறைந்த கார்ப் உணவுக்கு மாறினார். அவர் தினமும் 1200-1400 கலோரிகளை உட்கொண்டார். அவரது சுத்தமான உணவில் புதிய பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள், முளைகள், பருப்பு வகைகள் மற்றும் பனீர் மற்றும் பால் போன்ற பால் பொருட்களும் அடங்கும். உடல் எடையைக் குறைக்கும் பயணத்தின் போது அனைத்து நொறுக்குத் தீனிகளையும் கைவிட்டார்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் கடுமையான வொர்க் அவுட்டைத் தவிர, ஆனந்த் அம்பானி ஒரு திட்டமிட்ட உடற்பயிற்சி திட்டத்தை வைத்திருந்தார். அதை அவர் மத ரீதியாக பின்பற்றினார். அவரது உடற்பயிற்சி பயிற்சியாளர் வினோத் சன்னா அவருக்கான பயிற்சித் திட்டத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. 16 ஒர்க் அவுட் நுட்பங்களில் நிபுணராகவும், பல பாலிவுட் பிரபலங்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்த அவர், ஆனந்த் தனது மருந்துகளில் தலையிடாமல் உடல் எடையைக் குறைக்கும் திட்டத்தைத் திட்டமிட்டிருந்தார். அந்த திட்ட முயற்சிகளின் படி ஆனந்த் அம்பானி இயற்கையான முறையில் 18 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

மீண்டும் எடை அதிகரித்தது எப்படி?

ராதிகா மெர்ச்சன்ட்டின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இருந்து கசிந்த 2020 வீடியோ காட்சிகளில் தான், நெட்டிசன்களின் கவனத்திற்கு வந்த ஆனந்த் மீண்டும் உடல் எடையை அதிகரித்துள்ளார். டிசம்பர் 2022 இல் இஷா அம்பானியின் இரட்டைக் குழந்தைகளை, அம்பானிகள் வரவேற்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானபோதும் இதுவே கவனிக்கப்பட்டது.

இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது உடல் எடையை குறைப்பது எந்த அளவிற்கு கடினமோ, அதே அளவிற்கு அதை பராமரிப்பதும் கடினம். ஆகவே தேவையற்ற, உடலுக்கு ஒத்துவராத நொறுக்கு தீனிகளை புறம் தள்ளவிட்டு உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாக்கியத்திற்கு ஏற்ப மனிதன் தனக்குத் தேவையான சரியான உணவுகளைச் சாப்பிடாமல் ஆரோக்கியத்தை அழிக்கும் விஷங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதினால் தான் நோயாளியாகின்றான். எனவே உணவு முறைகளை மாற்றி நோய்கள் இல்லா வாழ்க்கையை வாழ முற்படுவோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

Gayathri Venkatesan

உண்ணாவிரத போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இபிஎஸ் விடுதலை

G SaravanaKumar

வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

Halley Karthik