பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை ரீமேக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழா, மூன்று நாட்கள் குஜராத்தின் ஜாம்நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் விஐபிக்கள் பலரும் பங்கேற்றனர். பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், சச்சின், டோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் என பெரும் பட்டாளமே அம்பானி வீட்டு இல்ல நிகழ்வில் பங்கேற்றது. விழாவும் ஆடல், பாடல் என அசத்தலாக நடைபெற்றது. வெறும் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூ. 1,250 கோடி செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
https://www.instagram.com/reel/C6b0sDDoElM/
இந்நிலையில் இந்த விழாவை பாகிஸ்தான் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ரீமேக் செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பகிரப்பட்டதிலிருந்து தற்போது வரை 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இந்த வீடியோ. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.







