‘வாழை’ #OTT ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள்…

vaazhai, cinema, updates,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தில் நிகிலா விமல் பூங்கொடி டீச்சர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து #Kenya -வில் விமான ஊழியர்கள் போராட்டம்!

இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தப்படம் செப்.27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.