கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த முதியவர் திடீர் தர்ணா!

நில அபகரிப்பு தொடர்பாக  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, மனு அளிக்க வந்த முதியவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பாளையம் எஸ்.எஸ்.குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற முதியவர்  குன்னத்தூர் பகுதியில்…

நில அபகரிப்பு தொடர்பாக  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, மனு
அளிக்க வந்த முதியவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.

கோவில்பாளையம் எஸ்.எஸ்.குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற முதியவர்  குன்னத்தூர் பகுதியில் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை, LGB என்ற தனியார் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு அபகரித்து விட்டதாக ஆர்டிஓ -வில் புகார் தெரிவித்தார். பின்னர், நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அந்த நிலம் முதியவருக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டுத் தரவில்லை எனக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும், வெளியில் வந்த அவர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பல வருடங்களாக தனது நிலத்தை அதிகாரிகள்
மீட்டு தராமல் இழுத்தடித்து வருவதாகவும், இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து முதலமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட
ஆட்சித்தலைவர் தனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென
கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தர்ணாவில் ஈடுபட்ட முதியவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அப்புறப்படுத்த முயன்ற போது, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.