அமுல் பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.2 உயர்வு – குஜராத்தில் மட்டும் விதிவிலக்கு

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு சார்பில் வெளிவரும் அமுல் பால் விலை குஜராத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது.   குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல்…

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு சார்பில் வெளிவரும் அமுல் பால் விலை குஜராத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது.

 

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இவை நாடு முழுவதும் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. இந்நிலையில், அமுல் பால் மற்றும் எருமைப் பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்ய அந்த அமைப்பு முடிவு எடுத்துள்ளது.

 

இதையடுத்து, குஜராத் மாநிலத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் தலா 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வையடுத்து, முழு கொழுப்பு நிறைந்த பால் விலை லிட்டருக்கு 61 ரூபாயில் இருந்து 63 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதமும் தனது பால் பாக்கெட்டுகளுக்கு தலா 2 ரூபாயை அமுல் நிறுவனம் அதிகரித்தது. இந்த விலை உயர்வானது, அமுல் நிறுவனத்தை இயக்குவதற்கும், பால் உற்பத்திக்கும் ஆகும் ஒட்டுமொத்த செலவு அதிகர்த்திருப்பதை ஈடு செய்யும் வகையில் நடைமுறைக்கு வருவதாக குஜராத் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.