அம்மோனியா வாயு கசிவு விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு!

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாரா விதமாக அம்மோனியா நச்சு வாயு கசிந்தது. இந்த விபத்தில் 60க்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ‌

இதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 பேரில் இளம் பெண் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 11 பேரில் இளம் பெண் ஒருவரும் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை எடுத்து அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த ஒரு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.