இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களின் பெயரில் உள்ள “இந்திய” என்பதை “பாரதிய” என மாற்றம் செய்யும் மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
ஐபிசி என அழைக்கப்படும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 160 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பின் மையமாக இருந்து வருகிறது இந்நிலையில், இந்திய தண்டனை சட்டம் தொடர்பான 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அமித் ஷா, “1860 முதல் 2023 வரை, நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின்படி செயல்பட்டது. மூன்று சட்டங்கள் மாற்றப்படும் நிலையில், குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார்.
அதன்படி இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் முறையே பாரதிய நியாய சங்ஹிதா, பாரதிய சக் ஷ்யா, பாரதிய நக்ரிக் சுரக்ச சன்ஹிதா என அழைக்கப்படும்.







