தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு குறித்து மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான பதிலுரையின் போது, நேற்று பிரதமர் மோடி தமிழக அமைச்சரை விமர்சனம் செய்தார். மேலும், தமிழகம் குறித்த பல்வேறு விஷயங்களை மோடி பேசினார்.







