அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் – மதுரை கோட்டம் தகவல்

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மதுரை – திருவனந்தபுரம்…

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மதுரை – திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16344/16343) மறு அறிவிப்பு வரும் வரை ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஏற்கனவே ஜூன் 16 முதல் இந்த ரயில்கள் பரிசோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு நின்று சென்று கொண்டிருந்தது.

மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒட்டன்சத்திரத்தில் நின்று முறையே காலை 07.50 மணிக்கு மற்றும் மாலை 05.30 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.