மின்கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவிக்கும் அமெரிக்கர்கள்!

மின்சாரத் துறையில், அதிகளவு தனியார்மயமாக்கப்பட்டதால், கொரோனா தொற்றுக்கு பின்னர் கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் மின் கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம். அமெரிக்கா ஒரு சொர்க்கபுரி. உலக வல்லரசு நாடு.…

மின்சாரத் துறையில், அதிகளவு தனியார்மயமாக்கப்பட்டதால், கொரோனா தொற்றுக்கு பின்னர் கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் மின் கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்கா ஒரு சொர்க்கபுரி. உலக வல்லரசு நாடு. அங்கு சென்றால் செல்வந்தராக வாழலாம் என மற்ற நாடுகளில் வாழும் மக்கள் நினைக்கின்றனர். எப்படியாகிலும் அமெரிக்கா சென்றுவிட கனவு காண்போர் பல கோடி. அமெரிக்க மக்கள் மேம்பட்ட உயர்ந்த வாழ்க்கையை வாழ்கின்றனர் எனவெல்லாம் நினைக்கின்றனர். ஆனால் அமெரிக்கா மக்கள் வீட்டுக்கு உபயோகபடுத்திய மின்சாரத்திற்கான கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் தான் இனி உலகையே வழி நடத்தும் என்றெல்லாம், உலக நாடுகளுக்கு பொருளாதார பாடம் நடத்தியது அமெரிக்கா. கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில், முன்னெப்போதையும் விட, மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இதனால்

மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள், தங்களின் வீடுகளுக்கு, பயன்படுத்திய மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்

என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது.

 

குறிப்பாக கொரோனா தொற்று காலத்திற்கு பின் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருமடங்காகியுள்ளது. அமெரிக்காவில் பல மாகாணங்களில் பணிநிறுத்த தடைகள் விதிக்கப்பட்டதால் வேலை வாய்ப்பின்மை பெருகியது. வருமானத்திற்கு வழி இல்லை. இதனால்

பணவீக்கம் அதிகமாகியதோடு, விலைவாசியும் உயர்ந்தது.மின் கட்டணமும் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.

அத்துடன், மின்கட்டண உயர்வானது, இயற்கை எரிவாயுவின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணம் மிக அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவில் காலநிலை மாற்றத்தால், வெப்ப நிலை அதிகரித்துள்ளது. இதனால் குளிர் சாதனங்களின் நுகர்வு அதிகமாகி, மின்சார பயன்பாடும் அதிகரிக்கிறது.

வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர் சாதனங்களோடு தான் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மின்சாரத் துறையில் அதிக அளவு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்க நாட்டின், எரிசக்தி முகமையைச் சேர்ந்த, மார்க் வோல்ஃப், கூறுகையில்,

“குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஏற்கனவே அதிக சுமையை எதிர்கொண்டு வருகின்றன. இப்போது மின் கட்டண உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது.

எனவே சதாரண மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய, மின் கட்டணத்தை பழைய நிலைக்கு கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும். மேலும் மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு , மின்சார விநியோகத்தை நிறுத்த வேண்டாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

-ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.