போதைப் பொருள் விற்பனை-மாவட்ட வாரிய புகார் அளிக்க எண்கள்

தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனையை புகார் அளிக்க மாவட்ட வாரியாக தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் கஞ்சா வெளியிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் மற்றும்…

தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனையை புகார் அளிக்க மாவட்ட வாரியாக தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.

தென் மாவட்டத்தில் கஞ்சா வெளியிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.

பள்ளி-கல்லூரி மாணவர்களை ஒன்றிணைத்து போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. தொடர் நடவடிக்கை காரணமாக தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சட்ட விரோதமாக போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டுவதாக புகார் கிடைத்து வருகிறது.

எனவே அதனை தவிர்க்கும் வகையில் பள்ளி கல்லூரிக்கு அருகே போதை வஸ்துக்கள் விற்பனை நடைபெற்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

 

மேலும் தென் மாவட்டத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு தனித்தனியாக தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.

போதை வஸ்துக்கள் தொடர்பான புகார்களை எந்த ஒரு தயக்கம் இன்றி தெரிவிக்கலாம். போதை வஸ்துக்கள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவி விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர்கள் கொடுக்கப்படும் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.