விளைட்டுத்துறைக்கு விரைவில் தகவல் மையம்: அமைச்சர் மெய்யநாதன்

  தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் குறைகளை தெரிவிப்பதற்கான தகவல் மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று பதக்கங்கள் வென்ற தேசிய மாணவர்…

 

தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் குறைகளை தெரிவிப்பதற்கான தகவல் மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று பதக்கங்கள் வென்ற தேசிய மாணவர் படையினருக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், தேசிய மாணவர் படையினர் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், விளையாட்டு வீரர்களுக்கு தகவல் மையம் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.

4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் தொடங்க, இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் மெய்யநாதன் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.