மேட் இன் ஹெவன் 2 தொடர் 5ஆவது எபிசோடில் பட்டியலினப் பெண்ணாக நடித்த நடிகை ராதிகா ஆப்தேவிற்கு அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 10 அமேசான் ஓடிடி தளத்தில் மேட் இன் ஹெவன் 2 தொடர் வெளியானது. இதில் நீரஜ் கெய்வான் இயக்கிய 5வது எபிசோடில் நடிகை ராதிகா ஆப்தே பட்டியலின மணப்பெண்ணாக நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்லவியாக நடித்துள்ள பட்டியலினப் பெண்ணின் எதிர்ப்பு, மறுப்பு, வலியுறுத்தல் என எல்லாம் பிடித்துள்ளது. இந்த எபிசோடை பார்க்கும் வன்சிட்ஸ், பகுஜன்கள் உங்களின் அடையாளத்தை வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் முக்கியத்துவம் கிடைக்கும். எல்லாமே அரசியல் தான் என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை ராதிகா ஆப்தே, அம்பேத்கர் மற்றும் புத்தரின் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் 2012ஆம் ஆண்டு வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமானார் ராதிகா ஆப்தே. பின்னர் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.