தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவின் நான்கு அணைகளில் இருக்கும் தண்ணீர்,
பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், காவிரி பாசன விவசாயத்திற்கும் போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ளார்.
காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டால், கர்நாடகாவில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு நகர மக்களின் குடிநீருக்காகவும், காவிரி படுகை விவசாயிகளின் நலனை காக்கவும் கர்நாடக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.







