பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் ‘அமரன்’ வெற்றிவிழா?

‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அமரன். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின், ராஜ்…

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் ‘அமரன்’ வெற்றிவிழா... முதலமைச்சர் கையால் விருது?

‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அமரன். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு ஜி.வி. பிரகாஷின் இசையும் ஒரு முக்கிய காரணமாகும்.

இப்படத்தின் பாடல்களும் அனைத்தும் தற்போதுவரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, வசூல் சாதனையும் படைத்துள்ள நிலையில் தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் படக்குழுவினருக்கு விருது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.