முதுமலையில் இருந்து நடிகை அமலாபால் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமான நடிகை அமலா பால் பின்னர் பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அவர் நடித்து பிரபலமானார். நடிகர் விஜய்யுடன் அவர் தலைவா திரைப்படத்தில் நடித்தார். இயக்குநர் விஜய்யை அவர் திருமணம் செய்துகொண்டார். எனினும் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
நடிகை அமலாபால் அவ்வப்போது இணையதளத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில், நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் சிவப்பு நிற உடையை அணிந்த புலி போல போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அமலாபால் சிவப்பினால் ஓவியம் வரையுங்கள் என தலைப்பிட்டுள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.







