தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் (SSR) தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட 13 கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, எஸ்.ஐ.ஆரை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐ(எம்), மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி கட்சிகளான, தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து விட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். மேலும் நாம் தமிழர், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்
தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.
நாடு முழுவதும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து பெரும்பாளான கட்சிகள் வெளிநடப்பு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




