ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு அனைத்து விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் விலகியதை அடுத்து, அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரசின் பாதுகாப்பு படைகளுக்கும் கடும் மோதல் நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளை தலிபான்கள் வேகமாகக் கைப்பற்றி வருகின்றனர். தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு படைகளும் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரான கந்தகாரில் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு விமான நிலையத்தில் தலிபான்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு மூன்று ராக்கெட்கள் வீசப்பட்டன. இதில் விமான நிலையத்தின் ரன்வே-யில் ஒரு ராக்கெட் விழுந்து வெடித்தது. இதனால், அங்கு அனைத்து விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன என்று விமான நிலைய தலைவர் மசெளத் பஸ்துன் தெரிவித்துள்ளார். ரன் வே-யை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் சரியாகிவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.